/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உறுப்பு தானம் துறைக்கு விருது கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
உறுப்பு தானம் துறைக்கு விருது கவர்னர், முதல்வர் வாழ்த்து
உறுப்பு தானம் துறைக்கு விருது கவர்னர், முதல்வர் வாழ்த்து
உறுப்பு தானம் துறைக்கு விருது கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : ஆக 09, 2025 07:18 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உடல் உறுப்புகள் தானம் துறையின் சேவைகளை பாராட்டி, மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா விருது வழங்கினார்.
கடந்தாண்டு புதுச்சேரியில் இறந்த 6 கொடையாளர்களிடம் இருந்து உறுப்புகள் பெறப்பட்டு, 19 நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 54 உயிருள்ள உறுப்பு தானங்கள் புதுச்சேரி மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் கீழ், உள்ள மாற்று மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளது.
இந்த உறுப்பு தானம் துறையின் சேவைகளை பாராட்டி, புதுடில்லியில் கடந்த 2ம் தேதி நடந்த 15வது இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சியில், புதுச்சேரி பிரதேசத்ததிற்கான 'சிறந்த யூடி' விருதை, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வழங்கினார்.
இந்த விருதை, புதுச்சேரி அரசு சார்பில், உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் சிறுநீரகவியல் மற்றும் நோடல் அதிகாரி துறை தலைவர் குமார் பெற்றார்.
தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநர் மற்றும் குழுவினர், பெற்ற விருதோடு மாநில கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அரசு செயலாளர் (சுகாதாரம்) செவ்வேள் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

