/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை சாலையில் இன்று குடியரசு தின விழா கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
/
கடற்கரை சாலையில் இன்று குடியரசு தின விழா கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
கடற்கரை சாலையில் இன்று குடியரசு தின விழா கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
கடற்கரை சாலையில் இன்று குடியரசு தின விழா கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
ADDED : ஜன 26, 2025 04:48 AM
புதுச்சேரி :  புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடக்கும் குடியரசு தின விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
புதுச்சேரி அரசு சார்பில் குடியரசு தின விழா, கடற்கரை சாலையில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. விழா மேடைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் காலை 8:25 மணிக்கு வருகிறார். அவரை தலைமை செயலர் சரத் சவுகான் வரவேற்று மேடைக்கு அழைத்து செல்கிறார்.
8.30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது, பரிசு வழங்குகிறார்.
தொடர்ந்து, போலீசார், தீயணைப்பு படையினர், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்கிறது. பல்வேறு துறைகளின் சாதனை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார வாகனங்களில் ஊர்வலம்,  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறந்த அணிவகுப்பு, அலங்கார வாகனங்களுக்கு பரிசும் வழங்கப்பட உள்ளது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
குடியரசு தின விழாவையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புது பஸ்டாண்ட், வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

