/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை

ADDED : நவ 23, 2024 05:32 AM

புதுச்சேரி : மாணவர்கள் சவால்களை வென்று சர்வதேச அளவில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் சார்பில், தேசிய கல்வி மாநாடு 'ஞான கும்பமேளா' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் துவங்கியது.
இதைத்தொடந்து, நேற்று நடந்த மாநாட்டு துவக்க விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது:
இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. பாரதிய கல்வி என்பது ஒவ்வொரு தனிமனிதனும், வாழ்க்கை முறையை வளர்த்துக்கொள்ள உதவும்.
இந்திய மொழிகளை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, வேலைவாய்ப்பு, நீதி மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் மொழியாக உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப திட்டங்களை உருவாக்க வேண்டும்.
மகாகாவி பாரதியாரின் பிறந்த நாளான டிச.11ம் தேதியை, 'பாரதிய பாஷா திவாஸ்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்திய மொழிகளின் ஒற்றுமைக்கான நடவடிக்கைகளின் மையமாக புதுச்சேரி மாற வேண்டும். மாணவர்கள் சவால்களை வென்று சர்வதேச அளவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இதில் கல்வியாளர்கள், அறிஞர்கள், பல்துறை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.