sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு

/

 பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு

 பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு

 பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு


ADDED : பிப் 01, 2026 05:33 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 2025--26 ஆண்டு விழா, பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமையில் நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் கைலாஷ்நாதன், புதுச்சேரி - கடலுார் உயர்மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, மறைமாவட்ட பொருளாளர் பிலோமின்தாஸ், மறைமாவட்ட கல்வி ஆணைய செயலர் ராஜேந்திரன், ரெட்டியார்பாளையம் பாதிரியார் ஜோசப்பால், துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா பாதிரியார் பிச்சமுத்து, போப் ஜான் பால்-2 கல்வியில் கல்லுாரி செயலாளர் ரிச்சர்டு பங்கேற்றனர்.

கடந்த கல்வி ஆண்டில் பள்ளி அடைந்த சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் விவரிக்கப்பட்டன. பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பெத்தி பயனீர் அகாடமி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.

இம்மையம் இந்திய அளவில் சிறந்த ஐ.ஐ.டி., ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட உள்ளது.

பல்வேறு பொது திறமைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், ஒவ்வொரு மொழி பாடம், வகுப்பில் முதல் இடத்தைப் பிடித்தவர்கள், ஆண்டு முழுதும் 100 சதவீதம் வருகைப் புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், 'கடின உழைப்பை அடித்தளமாக கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும். மாணவர்களின் முன்னேற்றமே நாளைய தேசத்தின் வலிமை என்பதை மனதில் கொண்டு முன்னேறுங்கள்' என குறிப்பிட்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நான்காம் வகுப்பு மாணவர் நிலேஷ்வர் மல்லர் கம்பம் மூலம் தனது திறமை வெளிப்படுத்தினார்.






      Dinamalar
      Follow us