/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாடு முன்னேற நல்ல நிர்வாகம் வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
/
நாடு முன்னேற நல்ல நிர்வாகம் வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
நாடு முன்னேற நல்ல நிர்வாகம் வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
நாடு முன்னேற நல்ல நிர்வாகம் வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
ADDED : டிச 25, 2024 03:47 AM

அரியாங்குப்பம் : நல்லாட்சி வார விழாவையொட்டி, வருவாய்த்துறை சார்பில், கிராமங்களை நோக்கி மக்கள் குறைதீர்வு முகாம் அரியாங்குப்பம் சாமிக்கண்ணு தனம்மாள் திருமண மஹாலில் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்.
கவர்னர் கைலாஷ்நாதன் விழாவை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது;
அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதி குறைதீர்வு முகாமில் உங்கள் பகுதி தலைவர்கள், அதிகாரிகளோடு சேர்ந்து உங்களுடைய தேவையை புரிந்து கொள்ள வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எந்த ஒரு நாடும் முன்னேற வேண்டும் என்றால், அங்கே நல்ல நிர்வாகம் இருக்க வேண்டும். நல்ல நிர்வாகம் என்றால், குடிமக்களின் குறைகளை, தேவைகளை தெரிந்து கொண்டு செயல்படுகிற நிர்வாகம் வேண்டும். அந்த நாடுதான் வல்லரசு நாடாக வளர முடியும்.
இந்தியா வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என, பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம் தான், இந்த நல்லாட்சி வார விழா திட்டம். நல்லாட்சி என்பது கிராமங்களில் இருந்துதான் தொடங்க வேண்டும். கிராமங்கள் தான், இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறது.
மக்கள் குறை தீர்வு முகாம்கள், கிராமப்புறத்தில் நடக்கும் போது, ஏழை, எளிய, சாமானிய மக்கள் அதிகம் பயன் பொறுவர். அரசின் திட்டங்களும், அதன் பயன்கள் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கடைசி குடிமகனுக்கும் போய் சேர வேண்டும்.
அப்போதுதான் நாடு முழுமையான வளர்ச்சி பெற முடியும்.
அரியாங்குப்பம் மற்றும் மணவெளி பகுதி மீனவர்கள், விவசாயிகள் அதிகமாக கொண்ட பகுதி மக்கள் மத்திய, -மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களை, அதிகாரிகள் மூலமாக தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.
நிகழ்ச்சியில், சபாநாயகர், செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் சரத் சவுகான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், தாசில்தார் பிரிதீவி உட்பட பலர் பங்கேற்றனர்.

