/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மான் கீ பாத் நிகழ்ச்சியில் கவர்னர், அமைச்சர் பங்கேற்பு
/
மான் கீ பாத் நிகழ்ச்சியில் கவர்னர், அமைச்சர் பங்கேற்பு
மான் கீ பாத் நிகழ்ச்சியில் கவர்னர், அமைச்சர் பங்கேற்பு
மான் கீ பாத் நிகழ்ச்சியில் கவர்னர், அமைச்சர் பங்கேற்பு
ADDED : செப் 01, 2025 07:19 AM

திருக்கனுார் : திருக்கனுாரில் நடந்த பிரதமர் மோடியின் மான் கீ பாத்-மனத்தின் குரல் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பில் கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் காணொளி மூலமாக கலந்துரையாடும் மனதின் குரல் (மான் கீபாத்) நிகழ்ச்சி நேற்று காலை 11:00 மணி அளவில் நாடு முழுதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் தனியார் திருமண நிலையத்தில் பிரதமர் மோடியின் மான் கீ பாத் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ., அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் கைலாஷ்நாதன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பிரதமரின் மான் கீ பாத் நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
இதில், பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.