தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டு கொம்யூனில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் 

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் 

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் 


ADDED : ஏப் 28, 2025 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூனில் மே தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் வரும் 1ம் தேதி நடக்கிறது.

இது குறித்து ஆணையர் எழில்ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயதுக்குட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் மே தினத்தை முன்னிட்டு, வரும் 1ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது.

அதன்படி, திருவாண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, திருபுவனை கொம்யூன் அலுவலகம், சன்னியாசிக் குப்பம், கலிதீர்த்தாள்குப்பம் (மேற்கு), மதகடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், செல்லிப்பட்டு, சோரப்பட்டு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலம், மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, கலிதீர்த்தாள்குப்பம் (கிழக்கு) திரவுபதியம்மன் கோவில் திடல், மண்ணாடிப்பட்டு ஜவஹர் பவன், மணலிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி, கூனிச்சம்பட்டு நாடக மேடை, திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, கைக்கிலப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி, தேத்தாம்பாக்கம் சமுதாய நலக்கூடம், சந்தை புதுக்குப்பம் சமுதாய நலக்கூடம், காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, கூட்டத்தில் முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்றலாம். அப்பணிகளை செய்ய தேவையான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us