/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பசுமை வளாக திட்டம்: கவர்னர் துவக்கி வைப்பு
/
பசுமை வளாக திட்டம்: கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : மார் 18, 2025 04:38 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய அளவிலான பசுமை வளாக திட்டத்தை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
பசுமை நகரங்களுக்கான பசுமை வளாகங்கள் திட்டத்தில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஐக்கிய நாடுகளில் சுற்றுச்சூழல் திட்டத்தில் இணைந்துள்ளது. இந்த திட்டத்தில், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், நிலைத்தன்மை மற்றும் காலநிலை மீள் தன்மையின் மையங்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழத்தில் நடந்த இந்த திட்டத்தின் துவக்க விழாவை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்து, பேசினார்.
முனைவர் நந்திவர்மன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கோல்டா எட்வின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், தஷலீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தின் முனைவர் விஸ்வநாதன், கல்வி அறியவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ஜவகர், செயலர் கேசவன், வனங்கள் மற்றும் வனவிலங்குகளின் தலைமை பாதுகாவலர் அருள்ராஜன் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில், உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து முதல்வர்கள், பேராசிரியர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.