/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்
/
குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்
ADDED : செப் 07, 2025 11:08 PM

புதுச்சேரி: புதுச்சேரி குரு வேலாயுத ஈஸ்வரர், குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
வசந்தம் நகரில் குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில், குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீடம் அமைந்துள்ளது.இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிேஷக விழா கடந்த 5ம் தேதி துவங்கியது.
அதையொட்டி, அன்று காலை விநாயகர் பிரார்த்தனை, கணபதி வேள்வி, தனபூஜை, மகாலட்சுமி வேள்வி, யாக வேள்வி திரவிய சமர்ப்பணம், பூர்ணாஹூதி நடந்தது.
நேற்று முன்தினம் (6ம் தேதி) காலை விநாயகர் ஆராதனை, யாக வேள்வி திரவிய சமர்ப்பணம், கோவிலில் இறைவனை எந்திரஸ்தாபனம் செய்தல், பஞ்சபுராணம் சமர்ப்பணம், தீபாராதனை நடந்தது. இரவு சிவனுக்கு 1008 அர்ச்சனைகள், கணபதி தாள சமர்ப்பணம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை விநாயகர் பிரார்த்தனை குருமார்கள் கங்கணம் அணிவித்தல், யாக வேள்வி திரவிய சமர்ப்பணம், கோமாதா வழிபாடு, கலசங்கள் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, மயிலம் பொம்மபுர ஆதீனம் பால சுவாமிகள் தலைமையில் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடந்தது. இரவு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.