/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில பெத்தாங் போட்டி குருசுக்குப்பம் அணி முதலிடம்
/
மாநில பெத்தாங் போட்டி குருசுக்குப்பம் அணி முதலிடம்
மாநில பெத்தாங் போட்டி குருசுக்குப்பம் அணி முதலிடம்
மாநில பெத்தாங் போட்டி குருசுக்குப்பம் அணி முதலிடம்
ADDED : ஆக 06, 2025 11:33 PM

புதுச்சேரி: மாநில அளவிலான பெத்தாங் போட்டியில், குருசுக்குப்பம் அணி முதல் பரிசை வென்றது.
ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 52வது ஆண்டு விழாவையொட்டி, குருசுக்குப்பம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மாநில அளவிலான பெத்தாங் போட்டி நடந்தது.
உப்பளம் நியூ போர்ட் எக்ஸ்போ மைதானத்தில் கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் நடந்த போட்டியில், 366 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் குருசுக்குப்பம் குடியிருப்பு நலன் மற்றும் விளையாட்டு அகாடமி அணி முதலிடத்தை பிடித்தது. பிளே பெஸ்ட் பாய்ஸ் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பரிசு கோப்பையை வழங்கினார். முதல் பரிசாக ரூ.18 ஆயிரம் ரொக்கம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.