/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைக்கிள் போலோ போட்டி குருவிநத்தம் அணி வெற்றி
/
சைக்கிள் போலோ போட்டி குருவிநத்தம் அணி வெற்றி
ADDED : மே 15, 2025 02:26 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி சைக்கிள் போலோ சங்கம் சார்பில், 2024-25ம் ஆண்டிற்கான மாநில அளவிலான 24வது சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டி வில்லியனுார் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
போட்டிக்கு சங்க செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். செங்குட்டுவன், செந்தில்குமரன், ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். அருளரசன் வரவேற்றார்.
போட்டியில் குருவிநத்தம் ராயல் ராமநாதன் ஸ்போர்ட்ஸ் கிளப், சேலியமேடு நற்பணி மன்றம், கரையாம்புத்துார் அன்னை குள்ளமாள் ஸ்போர்ஸ் கிளப் அணி மூன்றாம் பரிசு, வில்லியனுார் அணி முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் சாய் சரவணன்குமார், மோகன்தாஸ் பரிசுகள் வழங்கினர். தனகோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மணிமாறன் நன்றி கூறினார்.