/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்கா பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
/
குட்கா பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
ADDED : ஆக 06, 2025 12:33 AM
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்திரமோகன், 48; என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த ரூ.2000 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், திருக்கனுார், கே.மணவெளி பகுதிகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ.7125 மதிப்பிலான குட்கா பொருட்களை சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்கள் மணவெளியை சேர்ந்த காளிதாஸ், 52; திருக்கனுாரை சேர்ந்த நடராஜன், 55; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.