ADDED : ஜூன் 25, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : திருபுவனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் போலீசார் திருபுவனையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
திருபுவனை நான்குமுனை சந்திப்பில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளர் முகமது ரபீக் 46; என்பவரை கைது செய்து, ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.