/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துறை சார் தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு
/
துறை சார் தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு
ADDED : டிச 10, 2025 05:05 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் துறை சார் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அமைச்சகபணியாளர்களுக்கான துறை சார் தேர்வு, கடந்த ஜூலை மாதம் 24ம்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு வரும் 12ம் தேதி, புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், டில்லி ஆகிய பகுதிகளில் காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டுகளை அமைச்சக பணியாளர்கள் புதுச்சேரி தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை தேர்வு அறை, காரைக்கால் கலெக்டர் அலுவலகம், மாகே மண்டல நிர்வாக அலுவலகம், ஏனாம்மண்டல நிர்வாகஅலுவலகம், டில்லிஆணையர் அலுவலகத்தில் தங்களது அலுவலக அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
அமைச்சக பணியில் இருந்து போட்டி தேர்வு மூலம் பிற பணியில் சேர்ந்தவர்கள் துறை தேர்வில் கலந்து கொள்ள தேவையில்லை. இதற்கான உத்தரவை புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

