/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
/
அதிகாரிகள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
அதிகாரிகள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
அதிகாரிகள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : டிச 10, 2025 05:05 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றும் குரூப்-ஏ மற்றும் பி அரசு அதிகாரிகள் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசில் பணியாற்றி வரும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அரசு ஊழியர்களின் 2025ம் ஆண்டிற்கான வருடாந்திர அசையா சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, வரும் 1ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் http://esalary.py.gov.in/ipr என்ற இணையதளத்தில் தங்களது அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
புதுச்சேரி உள்ளாட்சித்துறை, அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் குரூப்-ஏ மற்றும் பி அதிகாரிகள் இணையதளத்தில் மட்டுமே தங்களது அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மற்ற அதிகாரிகள் தங்களது அசையா சொத்து விவரங்களை வரும் 1ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் vigil@py.gov.in மின்னஞ்சலில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், கடவுச்சொல்லை மறந்துவிட்ட அதிகாரிகள் தங்களின் பிறந்த தேதியை பயன்படுத்தி கடவுச்சொல்லை மீட்டெடுக்க முடியும். எனவே, அசையா சொத்து கணக்கை தாக்கல் செய்யாதவர்களின் பட்டியலை துல்லியமாக தயாரிக்கும் வகையில், அனைத்து துறை தலைவர்களும் தங்களது ஊழியர்களின் தரவுகளான அவர்களின் பதவி, பிறந்த தேதி, ஓய்வுபெறும் தேதி, ஊதிய வகை, ஊதிய நிலை, தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

