/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
/
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : ஆக 25, 2025 05:44 AM

புதுச்சேரி : புதுச்சேரி காவல்துறை மற்றும் பிட் இந்தியா மிஷன் சார்பில் உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த பேரணியை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி. ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், பிரவீன்குமார் திரிபாதி, ஈஷா சிங், ஏ.கே. லால், நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி.,க்கள், போலீசார், இளைஞர் கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலையில் துவங்கிய சைக்கிள் பேரணி சர்தார் வல்லபாய் படேல் சாலை, அண்ணா சாலை, சட்டசபை வழியாக மீண்டும் கடற்கரையில் முடிவடைந்தது.
முன்னதாக, உடல் ஆரோக்கியம் குறித்து கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.