/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்
/
சுகாதார ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்
ADDED : ஏப் 05, 2025 04:12 AM
புதுச்சேரி: சுகாதார இயக்க ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுகாதாரத் துறை தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ், டாக்டர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை (என்.ஹெச்.எம்) 700க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த என்.ஹெச்.எம் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் சுகாதாரத்துறை வளாகத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சுகதார இயக்க திட்ட இயக்குநர் கோவிந்தராஜன் நேற்று முன்தினம் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.
எச்சரிக்கையை மீறி அவர்கள் நேற்றும் போராட் டத்தை தொடர்ந்தனர்.

