மருத்துவ அலவன்ஸ் உயர்வு சுகாதார ஊழியர் சங்கம் நன்றி
மருத்துவ அலவன்ஸ் உயர்வு சுகாதார ஊழியர் சங்கம் நன்றி
UPDATED : நவ 13, 2026 09:03 PM
ADDED : நவ 13, 2026 09:00 PM
புதுச்சேரி: சுகாதார ஊழியர்களுக்கு எச்.பி.சி.ஏ., உயர்வு வழங்கிய அரசுக்கு புதுச்சேரி சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தலைவர் முனசாமி, பொது செயலாளர் ஜவகர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள கூட்டு அறிக்கை:
புதுச்சேரி அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவமனை நோயாளி பராமரிப்பு அலவன்ஸ் உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நிலை 8 மற்றும் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.4,100-ல் இருந்து ரூ. 5,125 ஆகவும், நிலை 9 மற்றும் மேல் உள்ளவர்களுக்கு ரூ.5,300-ல் இருந்து ரூ. 6,625 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்த மாதம் மாத சம்பளத்தில் இருந்து வழங்கப்படும் என்றும், ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2026 வரையிலான நிலுவைத் தொகை 2027-28-ல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய கவர்னர், முதல்வர், தலைமை செயலர், நிதித்துறை செயலர், சுகாதார செயலர், சுகதார இயக்குனர், இணை இயக்குனர், சுகாதார சார்பு செயலர், சுகாதார அலுவலக அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
