நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
புதுச்சேரியில் கோடை காலத்திற்கு பின்னும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்தது. இதனால் மக்கள் மிகுந்த அவதிகுள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.
இதேபோல் நெட்டப்பாக்கம், திருக்கனுார், பாகூர், வில்லியனுார் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.