ADDED : ஜன 26, 2024 05:18 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ெஹல்மெட் விழிப்புணர்வு பைக் ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு மாதம் கடந்த 15ம் தேதி முதல் போக்குவரத்து துறை சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் துவக்க நிகழ்ச்சி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்தது. போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சீத்தாராம ராஜா, கலியபெருமாள், அங்காளன், தட்சணாமூர்த்தி, வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலையில் துவங்கிய ஊர்வலம், அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை, சிவாஜி சிலை, இ.சி.ஆர்., ராஜிவ் சிக்னல், இந்திரா சிக்னல், பஸ் நிலையம் வழியாக மீண்டும் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் கூறுகையில், 'புதுச்சேரியில் கடந்தாண்டு பைக் விபத்துக்களில் இறந்த 110 பேரில் 80 சதவீதம் பேர் ெஹல்மெட் அணியாதவர்கள். பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பிற்கு ெஹல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ெஹல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் 1,000 ரூபாய் அபராதம், மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்' என்றார்.

