/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே ஏற்று நடத்த ஹிந்து முன்னணி மனு
/
சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே ஏற்று நடத்த ஹிந்து முன்னணி மனு
சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே ஏற்று நடத்த ஹிந்து முன்னணி மனு
சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே ஏற்று நடத்த ஹிந்து முன்னணி மனு
ADDED : அக் 09, 2025 02:05 AM
புதுச்சேரி: ரெஸ்டாரண்டிற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள புதுச்சேரியின் முதல் ஹிந்து பள்ளியான சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என, இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்கது கலவை சுப்பராய செட்டியார் துவங்கிய கல்வே காலேஜ், மற்றும் பொன்னு முருகேசப்பிள்ளை துவங்கிய எக்கோல் ஹிந்து பள்ளி.
பிரெஞ்சு ஆட்சி காலத்தில், ஹிந்துக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வி உரிமைக்காக துவங்கப்பட்ட இவ்விரு கல்வி நிறுவனங்களில், கலவை கல்வே காலேஜ் அரசுடமையாக்கி, புதுப்பித்து இயங்கி வருகிறது. அதே நேரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியாக இயங்கி வரும் சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசு மீட்டெடுக்க வேண்டும்.
பிரெஞ்சு ஆட்சி காலத்தில், பொது பள்ளிகளில் ஹிந்து மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட போது. அப்போதைய ஹிந்துக்களின் தலைவர் பொன்னு முருகேசன் பிள்ளை முயற்சியால் 1921ல் துவங்கப்பட்டது எக்கோல் இந்து பள்ளி.
நிதி பற்றாக்குறையினால் இப்பள்ளி, 1986ல் சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி என பெயர் மாற்றி, அரசின் நிதி உதவி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது. தற்போது இப்பள்ளி, பிரெஞ்சு ரெஸ்டாரண்டிற்கு வாடகைக்கு விட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஹிந்துக்கள் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் அலட்சிய போக்குடன் நடத்துகின்றனர். ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனங்களில் ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
நிதி நெருக்கடி காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி வாடகைக்கு விடப்பட்டுள்ளதால், இப்பள்ளியை தோற்றுவித்தன் நோக்கத்தை சீர்குலைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இப்பள்ளியின் வரலாற்று சிறப்பை கருத்தில் கொண்டு, அரசு தேவையான நிதி உதவி அளித்து, பள்ளியை தொடர்ந்து இயக்கிட வேண்டும். பள்ளியை ரெஸ்டாண்டிற்கு வாடகைக்கு விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.