/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு புகுந்து திருட்டு வில்லியனுாரில் துணிகரம்
/
வீடு புகுந்து திருட்டு வில்லியனுாரில் துணிகரம்
ADDED : ஜூன் 19, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுாரில் வீட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார், திருக்காமேஸ்வரர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம், 55. இவர், மனைவி, மகளை அழைத்துக் கொண்டு கடந்த 16ம் தேதி காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து தங்கம், வெள்ளி நகைகள், 25 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.
ராஜாராம் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.