/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., ஆட்சியில் அரிசிக்கு எவ்வளவு கமிஷன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
/
காங்., ஆட்சியில் அரிசிக்கு எவ்வளவு கமிஷன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
காங்., ஆட்சியில் அரிசிக்கு எவ்வளவு கமிஷன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
காங்., ஆட்சியில் அரிசிக்கு எவ்வளவு கமிஷன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
ADDED : ஜூன் 21, 2025 12:39 AM
புதுச்சேரி: கடந்த காலத்தில் பெற்ற தொகை அடிப்படையில் அரிசி கமிஷனை தி.மு.க., - காங்., தெரிவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துளாளார்.
அவர் கூறியதாவது:
மக்களுக்கு அரசு சார்பில், விநியோகம் செய்யப்படும் இலவச அரிசி ஒரு கிலோ 47.70 ரூபாய் கொள்முதலில் ரூ. 15 கமிஷனாக முதல்வர் மற்றும் துறை அதிகாரிகள் பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார். அதே போல் ஒரு கிலோ அரிசியில் ரூ. 7 கமிஷன் பெறுவதாக காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இண்டியா கூட்டணியில் இருந்து கொண்டு மாறுபட்ட கமிஷன் தொகையை இரு கட்சிகளும் கூறுவதால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் குழப்பத்தை தீர்க்க எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்., தலைவர் வைத்திலிங்கம் கடந்த தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சியில் சிவில் சப்ளை அமைச்சராக இருந்த கந்தசாமி ஆகியோர் தங்களது ஆட்சியில் எவ்வளவு கமிஷன் பெற்றோம்; தற்போது எவ்வளவு பெறுகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.
வைத்திலிங்கம் முதல்வராக இருந்த போது அரிசியில் கமிஷன் பெற்று தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக அவரின் வீட்டு முன்பு சில அரசியல் கட்சியினர் சாலையில் அரிசியை கொட்டி போராட்டம் நடத்தினர். அப்போது அவர் பெற்ற கமிஷன் தொகை எவ்வளவு.
கடந்த தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் முதல்வர் நாராயணசாமியும், உணவுத்துறை அமைச்சர் கந்தசாமியும் அரிசியில் கமிஷன் பெறுகிறார்கள் எனக்கூறி அப்போதைய கவர்னர் கிரண்பேடி அரிசி போடுவதையே நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக வங்கியில் பணம் போட உத்தரவிட்டார்.
அப்போது இவர்கள் பெற்ற கமிஷன் எவ்வளவு என்பதையும் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.