ADDED : ஜூலை 26, 2025 08:09 AM

புதுச்சேரி : ஓய்வூதியர்களுக்கு பாதகமான நிதி திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு மேடை சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
காமராஜர் சாலையில் நடந்த போராட்டத்திற்கு, சங்க த லைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஜிப்மர், ரயில்வே, வருமான வரித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஓய்வூதி யர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 8வது ஊதியக்குழு தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும். 8வது ஊதியக்குழு வரம்பு குறிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசின் சுகாதார மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விருப்பமுள்ள ஓய்வூதியர்களுக்கு அம ல்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு மருத்துவ நிதி உதவித்தொகை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக் கைகள் வலியுறுத்தினர். காமராஜர் சாலையில் இருந்து அண்ணாசாலை வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.