sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... புதுச்சேரியின் புகார் பெட்டி கதை தெரியுமா?

/

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... புதுச்சேரியின் புகார் பெட்டி கதை தெரியுமா?

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... புதுச்சேரியின் புகார் பெட்டி கதை தெரியுமா?

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... புதுச்சேரியின் புகார் பெட்டி கதை தெரியுமா?


ADDED : ஜூலை 13, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு துச்சேரியின் உச்ச அதிகாரமிக்க இடமாக உள்ள கவர்னர் மாளிகையின் முன்பும், பின்பும் இன்றைக்கு புகார் பெட்டி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு பிள்ளையார்சுழி பிரெஞ்சு ஆட்சியிலேயே போடப்பட்டுள்ளது. என்ன ஆச்சாரியமாக இருக்கின்றதா.. உண்மை தான்.

பிரெஞ்சு ஆட்சியில் கவர்னரை காட்டிலும் ஆளுமைமிக்க கடற்படை தளபதியாக திகழ்ந்தவர் லந்தி தொலாந்தல். ஐரோப்பியாவில் நடந்த போரில் பிரான்ஸ் நாட்டின் வெற்றி காரணமாக அவரை, 1758 ஏப்ரல் 26ம் தேதி அந்நாடு பெரும் படையும் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது. இந்தியாவில் இருக்கும் ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டு பிரெஞ்சு பேரரசினை நிறுவ அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதனால் வந்து இறங்கிய முதல் நாளில் இருந்தே அதிரடி காட்டினார். கடலுார் முற்றுகை, சேத்துப்பட்டு ஸ்ரீரங்கம், கள்ளக்குறிச்சி கோட்டைகளின் மீது தாக்குதல், தொடர்ந்து நாகூர், தஞ்சாவூர், செங்கம், திருவண்ணாமலை போர், சென்னை முற்றுகை என, வரிசையாக எல்லாமே சரவெடியாக இருந்தது.

வெற்றி தோல்வியை பற்றியெல்லாம் கவலைப்படாமல் போர்தொடுத்து கொண்டு இருந்தார். போருக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதனால் லந்தி தொலாந்தலின் பார்வை மக்களின் மீது திரும்பியது. எதற்கெடுத்தாலும் வரியை போட்டு மக்களை விழிபிதுங்க வைத்துக்கொண்டு இருந்தார். வரி சுமையை தாங்க முடியாமல் புதுச்சேரியை விட்டு சென்றவர்களும் ஏராளம்.

இது ஒருபுறம் இருக்க புதுச்சேரி மக்கள் மீது லல்லி தொலாந்தலின் கரிசனம் இருந்தது. மக்களின் கருத்தை கேட்க புகார் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.

புதுச்சேரி வாழ் மக்களில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள், மற்றவர்கள், உயர் சாதியானாலும், கீழ் சாதியாலும் தங்களது மொழிகளில் புகார்களை எழுதி கோட்டையின் கிழக்கு வாசல் அருகில் தொங்கப்விடப்பட்டு இருந்த புகார் பெட்டியில் போடலாம் என்ற அறிவிப்பு தமிழ், பிரெஞ்சு, பாரசீகம், தெலுங்கு மொழிகளில் எழுதி ஒட்டப்பட்டு இருந்தது.

இது சம்பந்தமாக பறையடித்து கூட ஊர் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் பெட்டியின் சாவியை லல்லியே தன்னிடம் வைத்துக்கொண்டார். தானே புகார் பெட்டியை திறந்தும் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அந்த நேரத்தில் மக்களின் வெறுப்பு உச்சமாக இருந்தது.

வரி விதிப்பு, உள்ளூர் கொடுமையின் விரக்தியில் உச்சத்தில் இருந்த புதுச்சேரி மக்கள் துண்டு தாளில் லல்லி மீது அடுக்கடுக்காக புகார்களை எழுதி போட்டனர்.

அதில் ஒரு பதிவு, நீங்கள் இறந்து போனால் ஒருவரும் கண்ணீர் வடிக்கமாட்டார்கள். மக்களுக்கு மகிழ்ச்சியும் செழிப்பும் தான் ஏற்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மற்றொரு புகாரில், வடக்கில் கும்பினி விவகாரங்களை மேம்படுத்திய முசியே புஸ்சியும், மச்சிலிபந்தரையும், பிற இடங்களை திறமையாக நிர்வகித்து கோடிக்கணத்தில் வருவாய் பெற்றுக்கொடுத்த முசியே மொராசினையும், திருச்சிராப்பள்ளியை பிடிக்க இருந்த படைகளையும் திரும்ப வர சொன்னீர்கள். காரைக்கால், வழுதாவூர், வில்லியநல்லுார், தியாகதுருவம் போன்ற பல சீமைகளை பகைவனிடம் ஒப்படைத்தீர்கள்.

செஞ்சியும் புதுச்சேரி மட்டும் தான் மிச்சம் இருக்கிறது.

ஐந்நுாறு நாளில் அவற்றையும் ஒப்படைத்துவிட்டு இங்கிலீஸ்காரனிடம் சரணடைந்து பரேல் பெற்றுகொண்டு இங்கு நீர் சம்பாதித்த பணத்தையெல்லாம் பத்திரப்படுத்திக்கொண்டு கப்பலேறி போகிறீர். இந்த பட்டணத்து சனங்களைத் தான் பிச்சைக்காரர்களாக்கி விட்டீர் என கடுமையாகவே விமர்சித்து எழுதப்பட்டு இந்தது.

இந்த புகார் பெட்டி பற்றிய குறிப்பு 1760 மார்ச் 26ம் தேதி ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us