sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு ஆட்சியில் தானாக பொங்கி வழிந்த நீரூற்றுகள்.... புதுச்சேரியின் பெருமையை தொலைத்துவிட்டு கையேந்துகிறோம்

/

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு ஆட்சியில் தானாக பொங்கி வழிந்த நீரூற்றுகள்.... புதுச்சேரியின் பெருமையை தொலைத்துவிட்டு கையேந்துகிறோம்

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு ஆட்சியில் தானாக பொங்கி வழிந்த நீரூற்றுகள்.... புதுச்சேரியின் பெருமையை தொலைத்துவிட்டு கையேந்துகிறோம்

 அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... பிரெஞ்சு ஆட்சியில் தானாக பொங்கி வழிந்த நீரூற்றுகள்.... புதுச்சேரியின் பெருமையை தொலைத்துவிட்டு கையேந்துகிறோம்


ADDED : டிச 14, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூ மியின் மார்பிலிருந்து சில நேரங்களில் தானாகவே பீறிட்டு நீர்த் துளிகள் வெறியேறும். அவை வெறும் தண்ணீரல்ல; காலம் காலமாக பூமி சுமந்து வைத்திருந்த உயிரின் மூச்சு. அத்தகைய அதிசயத்தின் பெயர் தான் பொங்கு ஊற்று. நிலத்தடியில், இரும்புப் பிடிப்புடன் உறைந்த பாறை அடுக்குகளுக்கிடையே, நுண்துளைகளால் நிரம்பிய பாறை, மண் அடுக்குகளில் நீர் சுருண்டு சுருண்டு தேங்கிக் கொண்டிருக்கும். மேடான பகுதிகளில் பெய்யும் மழை, மலைமடிகளில் வழியும் ஊற்று நீர், இவையெல்லாம் பல நுாற்றாண்டுகள் சேர்ந்து அந்த அடுக்குகளை நிரப்பும்.

ஒரு சிறு வழி, ஒரு நுண்ணிய விரிசல், அல்லது மனிதன் தோண்டிய ஓர் ஆழ்துளை கிடைத்தாலே போதும் - அந்த நீர் தன்னை அடக்க முடியாமல், விசையோடு, வேகத்தோடு, மகிழ்ச்சியோடு பூமியின் மேலே பீறிட்டு வெளிப்படும். அது ஊற்று மட்டும் அல்ல. அது பூமியின் ஆனந்தக் குரல். 1126ம் ஆண்டு பிரான்சின் ஆர்ட்டாயிஸ் பகுதியில் முதன்முதலாக இவ்வகை ஊற்றுகள் கண்டறியப்பட்டதால், உலகம் அவற்றை ஆர்ட்டீசியன் நீரூற்றுகள் என்று அழைக்கத் துவங்கினர்.

இந்த அதிசயம் தென்னிந்திய மண்ணில் குறிப்பாக புதுச்சேரியில் இயற்கையின் வரமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. இதை பிரெஞ்சு ஆவணங்கள் சொல்கின்றன. ஒரு காலத்தில் புதுச்சேரி, நீர்வளம் மிக்க விவசாயப் பூமியாகத் திகழ்ந்தது. வயல்கள் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம், நிலத்தின் அடியிலிருந்தே நீர் தானாக மேலெழுந்து வந்து கொட்டியது.

அன்றைய உழவர் கரையில் இத்தகைய பொங்கு ஊற்றுகள் இடையறாது நீர் ஒழுகச் செய்ததால், ஒழுகுகின்ற கரை என்று சொல்லப்பட்டது. கடைசியில் ஒழுகரை என்ற பெயரே அந்த ஊருக்குச் சூட்டப்பட்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது.

1877 ம் ஆண்டு, இந்திய நிலப்பொதியியல் கழகம், டபிள்யூ. கிங் தலைமையில் புதுச்சேரியைச் சுற்றியுள்ள பொங்கு ஊற்றுக் கிணறுகளை ஆய்வு செய்தது. அந்த ஆய்வுகள் ஒரு அதிசயத்தை வெளிப்படுத்தின.

இங்கு பொங்கு ஊற்றுகள் வெறும் குளிர்ந்த நீராக மட்டுமல்ல, சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளாகவும் பீறிட்டன. புதுச்சேரி மண், நீரை மட்டும் அல்ல அதன் வெப்பத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது.

1881ம் ஆண்டு ஆய்வுகள் இன்னும் வியப்பை ஏற்படுத்துகின்றன. புதுச்சேரி நகரப் பகுதியில் மூன்று முக்கியமான பொங்கு நீரூற்றுகள் இருந்தன. 174 அடி ஆழம் கொண்ட ஓர் ஊற்று, 5.57 அங்குலம் வாய்ப்புறம் வழியே இடையறாது நீரை வெளியேற்றியது. 119 அடி ஆழமுள்ள மற்றொரு ஊற்று, 7.08 அங்குல வாய்ப்புறத்துடன் உற்சாகமாகப் பாய்ந்தது. 261 அடி ஆழமுடைய மூன்றாவது ஊற்று அதுவோ ஒரு நீர்வேங்கை போல பொங்கியுள்ளது. 10.23 அங்குல வாய்ப்புறம் கொண்ட அந்த ஊற்று, வினாடிக்கு 146.5 கனஅடி நீரை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதாக இருந்தது. மேலும், சில இடங்களில் 1.5 மீட்டர் உயரத்திற்கே நீரை மேலே தள்ளிய ஊற்றுகளும் இருந்தன.

நகரம் மட்டுமல்ல.. பாகூர், வில்லியனூர், உழவர்கரை போன்ற கிராமப் பகுதிகளிலும் இந்தப் பொங்கு ஊற்றுகள் இயற்கையின் காவலர்களைப் போல நின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கூட, வயல்வெளிகளில் இவ்வூற்றுகளை நேரில் காண முடிந்தது.

இன்றைய உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் — ஒரு காலத்தில் அது போலீஸ் மைதானம். அந்தத் திடலில் இருந்த பொங்கு நீரூற்று, அருகிலிருந்த கிணற்றுப் பகுதியில் இடையறாது நீரைப் பெய்த வண்ணம், காலத்தை எண்ணாமல் பாய்ந்துகொண்டிருந்தது. வில்லியனுார், கோட்டைமேடு பகுதிகளிலும் இத்தகைய ஊற்றுகள் இருந்ததாக முதியோர் நினைவுகள் சொல்லுகின்றன.

ஆனால் இன்று… அந்த ஊற்றுகள் இருந்த இடங்களில் மறைந்துபோய் ஆழ்துளைக் கிணறுகள் தோன்றிவிட்டன. இயற்கையின் இந்த தானியங்கும் நீர்த் துடிப்பு கால வெள்ளத்தில் அடங்கிபோய்விட்டது. இப்போது இரும்பு - பிளாஸ்டிக் குழாய்களில் அடைக்கப்பட்டு வீடுகளுக்கு வருகிறது.

புதுச்சேரியின் பொங்கிய நீரூற்றுகள் அனைத்தும் ஒரு காலத்தில் பெருமையாக கருத்தப்பட்டது. ஒரு நிலத்தின் உயிராகவும் இருந்தது. ஆனால் புதுச்சேரியின் மக்கள் தொகை பெருக்கம், ஓயாமல் உறிஞ்சிய மோட்டார்கள் அந்த பெருமை இழக்க செய்து, நிலத்தடி நீரை படுபாதாளத்திற்கு கொண்டு சென்று ஒளித்துவிட்டு வைத்துவிட்டது. ஆழ்துளை கிணறுபோட்டு இப்போது அவற்றை தேடிக்கொண்டு இருக்கிறோம். குடிநீருக்கும் தமிழகத்திடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இயற்கை தந்த வரங்களை நாம் மறந்தால், ஒருநாள் அந்த நினைவுகளே நீரைப் போல கண்ணீராகி விடும். இது புதுச்சேரியின் எதிர்காலத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்து மண்ணின் பெருமையை மீட்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை...






      Dinamalar
      Follow us