sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... கணவருடன் தீயில் கலந்த காரிகை பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியை உலுக்கிய சோக சம்பவம்...

/

அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... கணவருடன் தீயில் கலந்த காரிகை பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியை உலுக்கிய சோக சம்பவம்...

அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... கணவருடன் தீயில் கலந்த காரிகை பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியை உலுக்கிய சோக சம்பவம்...

அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே.... கணவருடன் தீயில் கலந்த காரிகை பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியை உலுக்கிய சோக சம்பவம்...


ADDED : நவ 09, 2025 05:45 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தக் காலம்... தமிழகம் முழுதும் கணவன் இறந்தால் மனைவியும் தீயில் கலக்க வேண்டும் என்ற உடன்கட்டை மரபு சமூகத்தின் ஆழத்திலும் மனதிலும் ஊறியிருந்த காலம். புதுச்சேரி நகரம் பிரெஞ்சு ஆட்சியின் ஒளியில் மிளிர்ந்தாலும், ஜொலித்தாலும் அந்தக் கொடிய பழக்கத்தின் நிழலில் இருந்து முழுமையாகத் தப்பிக்க முடியவில்லை.

அந்தக் காலத்தில், கவர்னர் பிரான்சுவா மார்த்தேன் ஆட்சியில் இருந்தார். அவர் ஆட்சியின் அமைதியான நாட்களில் இதயத்தை உருக்கும் ஒரு சோக சம்பவம் நடந்தது. பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றிய ஒரு வீரர் அவர் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தார். அதற்குப் பிறகு ஓய்வு பெற்று புதுச்சேரியில் தங்கி அமைதியான வாழ்க்கையைத் துவங்கினார்.

வயது எழுபத்தைந்து வந்தபோது, ஒரு நாள் திடீரென உயிர் பிரிந்தது. அந்தச் செய்தி வீட்டை மட்டுமல்ல, அவரது மனைவியின் இதயத்தையே சிதைத்தது. அவள் வயது நாற்பது தான். ஆனால் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல், கண்ணீர் வழிந்தபடியே கூறினாள்.

என் கணவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வெறுமை. அவரில்லாமல் இந்த உலகில் நான் எப்படி உயிரோடிருப்பேன். அவருடன் சேர்ந்து நானும் தீயில் கலக்கப் போகிறேன் என்றாள். அவளது குரல் வீட்டைச் சுற்றி ஒரு மின்னல்போலப் பரவியது.

இந்த செய்தி கவர்னர் பிரான்சுவா மார்த்தேனின் காதுகளில் விழுந்தது. அவரது இதயம் உலுக்கியது. உடனே அதிகாரிகளை அனுப்பி, அந்தப் பெண்ணிடம் சொல்லச் சொன்னார். அதன்படி அதிகாரிகள் சென்று, அம்மா, இது துயரத்தின் திடீர் முடிவு. அரசு உங்களுக்கு பாதுகாப்பும் பொருள் உதவியும் தரும். தயவு செய்து இந்த முடிவை மாற்றுங்கள். இது கவர்னரின் அன்பு வேண்டுகோள் என்றனர்.

ஆனால் அந்தப் பெண் திடமாகப் பதிலளித்தாள். கவர்னரின் அனுதாபத்திற்கும் நன்றி. ஆனால் என் உயிர் என் கணவனோடு இணைந்தது. அவர் இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம். இனி இந்த உலகில் நான் வாழ்வது கொடுமையில் கொடுமை. அதிகாரிகள் மறுபடியும் உடன் கட்டை ஏறுதலை தடுக்க முயன்றனர்.

ஆனால் அவள் கூர்மையாகச் சொன்னாள். இன்னும் யாராவது வந்து என்னைத் தடுக்க முயன்றால், என் பல்லால் என் நாக்கைக் கடித்து உயிரை விடுவேன். இல்லையெனில் குளத்தில் பாய்ந்து மரணத்தைத் தழுவுவேன் என்று சீறினாள். அந்தச் சொற்கள் கவர்னரின் இதயத்தையே நெருப்பாகத் துளைத்தன. அவர் அமைதியாக விலகினார்.

அது மழைக்காலம். மண்ணில் ஈரமும், வானில் சோகமும் கலந்திருந்தது. கணவனின் சிதை எரிக்கத் தயாரானது. அவள் தன்னிடம் இருந்த ஒவ்வொரு நகையையும் கழற்றி, சுற்றியிருந்த உறவினர்களிடம் கொடுத்தாள்.

இதெல்லாம் உங்களுக்கே… இனி எனக்கு இவை தேவையில்லை. எனது பணி முடிந்தது என்று சொல்லியப்படியே அவள் ஒரு பார்வை கூட திரும்பிப் பார்க்காமல், சிதையை நோக்கி மெல்ல நடந்தாள். யாருடைய உதவியுமின்றி, கணவனின் சிதையின் பக்கத்தில் சென்று படுத்துக் கொண்டாள். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் உறைந்தனர். கண்ணீரை அடக்க முடியாமல் திகைத்தனர்.

மழைக்காலம் என்பதால் மரக்கட்டைகள் நனையியிருந்தன. சிதையில் புகை மட்டும் எழுப்பியது. தீ பரவவில்லை. அப்போது அந்தப் பெண் சைகை செய்து ஆட்களை அழைத்தாள். காற்றுக்கு எதிராக தீ வைத்தால் எப்படி எரியும். மறுபக்கம் தீ வையுங்கள். அப்போது தான் நெருப்பு பரவும். அவளது குரலில் ஒரு அமைதி. அந்த அமைதியில் மரணத்தையும் மிஞ்சிய ஒரு தியாக உணர்வு இருந்தது.

அருகில் இருந்தவர்கள் திகைத்தபடியே அவள் சொன்னபடி செய்தனர். மறுபக்கத்தில் தீ வைத்ததும், நெருப்பு பரவியது. அவள் கணவனின் மார்பில் தலையிட்டு அமைதியாகக் கிடந்தாள். சிறிது நேரத்தில் இரண்டு உடல்களும் தீயில் சாம்பலாகின. இந்த சோக சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது.

கவர்னர் பிரான்சுவா மார்த்தேனையும் கண் கலங்க வைத்தது. நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத காட்சியை கண்டேன். கணவருடன் தீயில் கலந்த காரிகை கதை என்று தனது குறிப்பில் உருக்கமாகவே குறிப்பிட்டுள்ளார்.

நெருப்பு சாம்பலாகி மண்ணில் கலந்தாலும் அப்பெண்ணின் அன்பு, தியாகம், உறுதி இன்றும் புதுச்சேரியின் வரலாற்றில் மங்காத சின்னமாக நிற்கிறது.






      Dinamalar
      Follow us