/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனை குழு உறுப்பினராக செல்வகணபதி நியமனம்
/
பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனை குழு உறுப்பினராக செல்வகணபதி நியமனம்
பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனை குழு உறுப்பினராக செல்வகணபதி நியமனம்
பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனை குழு உறுப்பினராக செல்வகணபதி நியமனம்
ADDED : நவ 09, 2025 05:45 AM
புதுச்சேரி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை ஒருங்கிணைத்த வருமான வரித்துறையின் கீழ் இயங்கும் பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனைக் குழுவின், உறுப்பினராக செல்வகணபதி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிந்துரையின் படி, மத்திய நிதி துறையின் கீழ் வருமான வரித்துறையில், பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனைக் குழு இயங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை ஒருங்கிணைத்த வருமான வரித்துறையின் கீழ் இயங்கும் இக்குழுவின், உறுப்பினராக புதுச்சேரியை சேர்ந்த செல்வகணபதி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவில், புதுச்சேரியிலிருந்து நியமிக்கப்படும் முதல் எம்.பி., இவரே. இக்குழுவின் பதவி காலம் 2 ஆண்டுகள் செயல்படும். ஆண்டிற்கு இருமுறை இக்குழு கூட்டம் நடைபெறும். வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பொதுவான நிர்வாக மற்றும் நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு பாலமாக இக்குழு செயல்படுகிறது.
மேலும், நேரடி வரி நிர்வாகம் மற்றும் சேவைகள் குறித்த கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்ள, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் கல்வி, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகளையும் மற்றும் உள்ளீடுகளையும் சேகரித்து தேவையான பரிந்துரைகளை நிதி அமைச் சகத்திற்கு வழங்கும்.
இக்குழு கூட்டத்தில் வரி திரும்பப்பெறுதல், முன்கூட்டியே வரி செலுத்துதல் மற்றும் நேரடி வரி நிர்வாகம் தொடர்பான பிற விஷயங்கள் போன்ற குறைபாடுகளை பரிசீலிக்கும் மன்றமாக செயல்படும்.
இக்குழுவின் முதல் சந்திப்பு சென்னையில் அடுத்த இரண்டு வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

