/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச பஸ் பாஸ் தருவதாக ரூ.4 லட்சம் நகை 'அபேஸ்' புதுச்சேரி மூதாட்டியை ஏமாற்றிய மதுரை ஆசாமி கைது
/
இலவச பஸ் பாஸ் தருவதாக ரூ.4 லட்சம் நகை 'அபேஸ்' புதுச்சேரி மூதாட்டியை ஏமாற்றிய மதுரை ஆசாமி கைது
இலவச பஸ் பாஸ் தருவதாக ரூ.4 லட்சம் நகை 'அபேஸ்' புதுச்சேரி மூதாட்டியை ஏமாற்றிய மதுரை ஆசாமி கைது
இலவச பஸ் பாஸ் தருவதாக ரூ.4 லட்சம் நகை 'அபேஸ்' புதுச்சேரி மூதாட்டியை ஏமாற்றிய மதுரை ஆசாமி கைது
ADDED : நவ 09, 2025 05:43 AM

புதுச்சேரி: இலவச பஸ் பாஸ் வாங்கி தருவதாக கூறி, மூதாட்டியிடம் ரூ.4 லடசம் நகைகளை அபகரித்து சென்ற, மதுரை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி சந்திரா,65.
இவர், கடந்த 13ம் தேதி, புதுச்சேரி பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது, அருகே வந்த அடையாளம் தெரியாத நபர், ஆதார் அட்டை கொடுத்தால் இலவச பஸ் பாஸ் வாங்கி தருவதாக கூறினார்.
அதனை நம்பிய சந்திராவை, போட்டோ எடுக்கலாம் எனக்கூறி, பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளி கடை அருகே அழைத்து சென்று, வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். பின், போட்டோ எடுக்கும் போது நகை போட்டிருந்தால் பஸ் பாஸ் கிடைக்காது எனக்கூறி, அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின் மற்றும் அரை சவரன் மோதிரத்தை கழற்றி வாங்கினார். பின்னர், இங்கேயே இருங்கள் போட்டோ கிராபரை அழைத்து வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவே இல்லை.
இதுகுறித்து சந்திரா கடந்த 24ம் தேதி அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், மூதாட்டியிடம் நகையை அபகரித்து சென்றது, பழைய குற்றவாளியான மதுரை, எலீஸ் நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் சித்திரவேலு,48; என்பதும், இவர் மீது புதுச்சேரி, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இதுபோன்ற மோசடி தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், திருச்சி பஸ் நிலையம் அருகே பதுங்கியிருந்த சித்திரவேலுவை கைது செய்து விசாரித்தனர். அதில், மூதாட்டியிடம் திருடிய நகையை ரூ.4 லட்சத்திற்கு விற்று, செலவு போக மீதி ரூ.3.5 லட்சம் வைத்திருப்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், அவர் வைத்திருந்த பணம் ரூ.3.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, புதுச்சேரி அழைத்து வந்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் விரைந்து செயல்பட்டு, மோசடி ஆசாமியை கைது செய்த இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படைபோலீசார் சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.

