/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தில் ஜாமின் எதிர்த்து வழக்கு தொடர்வேன்
/
போலி மருந்து விவகாரத்தில் ஜாமின் எதிர்த்து வழக்கு தொடர்வேன்
போலி மருந்து விவகாரத்தில் ஜாமின் எதிர்த்து வழக்கு தொடர்வேன்
போலி மருந்து விவகாரத்தில் ஜாமின் எதிர்த்து வழக்கு தொடர்வேன்
ADDED : ஜன 09, 2026 08:00 AM
'மாஜி' முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
நாயாணசாமி படம் : அரியாங்குப்பம்: போலி மருந்து விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என, முன்னாள் முதல்வர் நாராணயசாமி தெரிவித்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், பங்கேற்ற அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த வழக்கில், 26 குற்றவாளிகளுக்கு, நீதி மன்றத்தில் ஜாமின் கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி மருந்து தயாரித்து, நாடு முழுதும் விநியோகம் செய்த ராஜா அவரது கூட்டாளிகள், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. போலி மருந்து தயாரித்து விற்பனை செய்து, மக்களின் உயிரோடு விளையாடியது, கொலை குற்றம் செய்ததற்கு சமமானது. குற்றவாளிகளை காப்பற்றும் நோக்கில், புதுச்சேரி அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதடவில்லை. ஜாமினில் விடக்கூடாது என, அழுத்தம் கொடுக்கவில்லை.
முதல்வர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், கூட்டு சேர்ந்து, இந்த வழக்கை முடி மறைக்க பார்க்கின்றனர். சி.பி.ஐ., அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்துவார்களா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வழக்கில், சபாநாயகருக்கு தொடர்பு உள்ளது. என்.ஆர்.காங்., மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஆதரவு இல்லாமல், குற்றவாளிகள் ஜாமினில் வெளியே வரமுடியாது. அதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' என்றார்.

