/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா கல்வி குழுமத்தில் எமெர்சிவ் டெக்னாலஜி மையம்
/
ஆச்சார்யா கல்வி குழுமத்தில் எமெர்சிவ் டெக்னாலஜி மையம்
ஆச்சார்யா கல்வி குழுமத்தில் எமெர்சிவ் டெக்னாலஜி மையம்
ஆச்சார்யா கல்வி குழுமத்தில் எமெர்சிவ் டெக்னாலஜி மையம்
ADDED : ஜன 10, 2026 05:22 AM

புதுச்சேரி:ஆச்சார்யா கல்வி குழுமத்தில் எமெர்சிவ் டெக்னாலஜி மையம் நிறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆச்சார்யா கல்விக் குழுமம் மற்றும் ஹீரோஸ் இன்னவேஷன் வென்ச்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முன்னோடி நெறிமுறை மற்றும் எமெர்சிவ் டெக்னாலஜி மையம் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆச்சார்யா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் முன்னிலையில் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த இந்த ஒப்பந்தம் மூலம் கல்வியில் முற்போக்கான தொழில்நுட்ப நெறிமுறையை இணைக்கும். ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி இந்தியாவின் முதல் ஏ.ஐ., ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கான படி எடுத்துள்ளது.
இந்த முயற்சி எமெர்சிவ் ஏ.ஐ., மாதிரிகள், மற்றும் அதிநவீன விசுவல் புரொடெக் ஷன் ஆய்வகங்களை கொண்ட தொழில் துறை சார்ந்த பயிற்சிகளை அறிமுகப்படுத்தும். இதன்மூலம் மாணவர்களுக்கு ஏ.ஐ., பயன்பாடுகள் மற்றும் எமர்சிவ் தொழில்நுட்பங்களில் செயல்முறை பயிற்சி அனுபவத்தை வழங்கி தொழில்நுட்பத் துறையில் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார் படுத்தும்.

