/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதானா நகரில் ரூ. 35.56 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
/
சுதானா நகரில் ரூ. 35.56 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
சுதானா நகரில் ரூ. 35.56 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
சுதானா நகரில் ரூ. 35.56 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
ADDED : நவ 19, 2024 07:13 AM

முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
புதுச்சேரி: சுதானா நகரில் ரூ. 35.56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
முதலியார்பேட்டை சுதானா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஹட்கோ கடன் உதவியுடன் கடந்த 2016 முதல் 2022ம் வரை ரூ. 8.29 கோடி மதிப்பில் 20 லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 10 லட்சம் கொள்ளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, நீர் உந்து குழாய்கள், நீர் பங்கீட்டு குழாய்கள், மோட்டார் பம்புசெட்டுகள் உட்பட அம்ரூத் நிதி உதவியுடன் ரூ. 27.27 கோடி மதிப்பில் நீர் உந்து குழாய்கள், நீர்பங்குகீட்டு குழாய்கள், குடிநீர் இணைப்புகள் மற்றும் சாலை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
இதன் மூலம் சுதானா நகர், திவான் கந்தப்ப முதலியார் நகர், வேலன் நகர், ஆதிமூலம் நகர், கணபதி நகர், சேத்திலால் நகர், மூகாம்பிகை நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் 36,000 மக்கள் பெயன் பெற உள்ளனர். மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் சம்பத், பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயலர் சரத்சவுக்கான், பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.