மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரில் மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரில் மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா
UPDATED : அக் 02, 2026 01:49 AM
ADDED : அக் 02, 2026 01:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி கலிதீர்தாள்குப்பம் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் 21-வது மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை வேந்தர் நிலா பிரியதர்ஷினி, இணைச் செயலாளர் வேலாயுதம், அறங்காவலர் சூர்யாகுமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குநர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், சஞ்சய், மருத்துவக் கண்காணிப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் அறக்கட்டளை மேலாண் இயக்குநர் தனசேகரன் பேசுகையில், நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகள் குறித்து மாணவர்கள் தொடர்ந்து அறிந்துகொள்ள வேண்டும், மாணவர்களுக்கு தேவையான நவீன கல்வி மற்றும் மருத்துவப் பயிற்சி வசதிகள் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 21-வது மருத்துவ மாணவர்களின் மருத்துவக் கல்விப் பயணம் அறிவு, திறமை, மனிதநேயம் மற்றும் சமூக சேவையுடன் அமைய வேண்டும் என அவர் தெரிவித்து கொண்டார்.
டாக்டர் தீபா சோமநாத் நன்றி கூறினார்.
