டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு 365 ரன்கள் இலக்கு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு 365 ரன்கள் இலக்கு
UPDATED : அக் 02, 2026 01:49 AM
ADDED : அக் 02, 2026 01:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி சீகெம் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 365 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
புதுச்சேரி சீகெம் மைதானத்தில் ஆஸ்திரேலிய ‘ஏ’ மற்றும் இந்திய ‘ஏ’ அணிகள் மோதும் நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களுடன் ஆட்டத்தை துவக்கியது. 6வது விக்கெட்டிற்கு ேஷக் ரஷீத், தனுஷ் கோட்டியன் ஜோடி 46 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு வெறும் 10 ரன்களுக்கு கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வேகப்பந்து வீச்சாளர் லியம் ஹாட்சர் ரஷீதை கிளீன் போல்டு செய்தார். தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் மற்றும் ஆப் ஸ்பின்னர் கோரிரொச்சிச்சியோலி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, மதிய உணவுக்கு முன் இந்திய ‘ஏ’ அணி 167 ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் 40, நாதன் மெக்ஸ்வீனி, 36 ரன்கள் சேர்த்தனர். ஜேசன் சாங்கா ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிய ஒரு மணி நேரத்திற்கு முன் ஆஸ்திரேலிய அணி 173 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில், டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் இலக்காக கொண்டு, இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கிய இந்திய ‘ஏ’ அணி சாய் சுதர்ஷன் 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததுடன் நிறைவடைந்தது.
சுருக்கமான ஸ்கோர்: ஆஸ்திரேலிய‘ஏ’ 358 ஆல் அவுட் & 49 ஓவர்களில் 173/4 டிக்ளேர் (சாம் கான்ஸ்டாஸ் 40, ஜேசன் சாங்கா 44 ஆட்டமிழக்காமல், தனுஷ் கோட்டியன் 2-55) எதிராக இந்திய ‘ஏ’ 68 ஓவர்களில் 167 ஆல் அவுட் (ஷேக் ரஷீத் 42, ஜே ரிச்சர்ட்சன் 3-37, கோரி ரொச்சிச்சியோலி 3-33) & 13 ஓவர்களில் 28/1.
