/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் கணித்தமிழ் பேரவை துவக்கம்
/
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் கணித்தமிழ் பேரவை துவக்கம்
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் கணித்தமிழ் பேரவை துவக்கம்
பாரதிதாசன் அரசு கல்லுாரியில் கணித்தமிழ் பேரவை துவக்கம்
ADDED : அக் 29, 2024 06:27 AM

புதுச்சேரி: பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில் கணித்தமிழ்பேரவை துவக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசினால் துவங்கப்பட்ட தமிழ் இணைய கல்வி கழகம் கல்லுாரிகள் தோறும், கணித் தமிழ்பேரவை அமைப்பினை உருவாக்கி, அதன் வழியாக தமிழை கணினி தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றது.
ஆண்டுதோறும் பல்வேறு கல்லுாரிகளை தேர்வு செய்து, ஆதார நிதியும் வழங்கி வருகின்றது.
அதன்படி, இந்த ஆதார நிதி பெற்று பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் கணித்தமிழ்பேரவை துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கி, கணித்தமிழ்பேரவையின் வலைப்பதிவினை துவங்கி வைத்தார்.
கணித்தமிழ்பேரவை ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக இணை பேராசிரியர் தனலட்சுமி, இயற்கை மொழியாய்வும், செயற்கை நுண்ணிறிவும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ் துறை தலைவர் சேதுபதி நோக்கவுரையாற்றினார்.
ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். மூன்றாமாண்டு மாணவி வசுந்திரா நன்றி கூறினார்.