ADDED : அக் 25, 2026 08:29 PM

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் சாலையில் ஸ்ரீ சண்முகா ஹைப்பர் மார்ட்டை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி ஸ்ரீ சண்முகா சில்க்ஸ் – ன் புதிய உதயமாக காமராஜர் சாலையில் ஸ்ரீ சண்முகா ‘ஹைப்பர் மார்ட்’ திறப்பு விழா இன்று (அக்.,25) நடந்தது. விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, ேஷாரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
விழாவில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், சிவக்கொழுந்து, ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், நேரு, மோகன்தாஸ், வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சிவசங்கர், சாமிநாதன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் உறவினர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வருகை தந்தவர்களை சண்முகா சில்க்ஸ் உரிமையாளர்கள் சண்முகம், ராஜேஸ்வரி சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர்.
புதிதாக திறக்கப்பட்ட ஸ்ரீ சண்முகா ‘ஹைப்பர் மார்ட்’ ேஷாரூம் 4 தளங்களை கொண்டுள்ளது. முதல் தளத்தில் பேன்சி, காட்டன், சிந்தடிக், கைத்தறி, பனாரஸ், டிசைனர் புடவைகள் மற்றும் பிளவுஸ், பெண்களுக்கான அணிகலன்களும், 2-ம் தளத்தில் திருமண பட்டுப் புடவைகள், புடவை மற்றும் வேட்டி காம்போ, லெகங்கா, ப்ராக், சுடிதார், குர்த்தீஸ், வெஸ்டர்ன் டாப்ஸ், நைட் சூட், ஜீன்ஸ், லெக்கின்ஸ், சுடிதார் மெட்டிரியல்ஸ், இன்னர்வேர்ஸ்களும், 3-ம் தளத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான ரெடிமேட்ஸ், கேஷூவல்ஸ், பார்ட்டி வேர், குழந்தைகளுக்கான உள்ளாடைகள், டாய்ஸ்களும், 4-ம் தளத்தில் ஆண்களுக்கான சர்ட்ஸ், டி-சர்ட்ஸ், பேண்ட்ஸ், டிரவுசர்ஸ், ஜீன்ஸ், ட்ராக்ஸ், வேட்டி, பிளேசர், சூட், பைஜாமா, ஷர்வானி மற்றும் சுவாமி வஸ்திரம், கைக்குட்டை, துண்டு, போர்வைகள் விற்பனைக்கு உள்ளன.
திறப்பு விழா சலுகையாக தீபாவளி பண்டிகை வரை வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடியும், ரூ.1,500-க்கும் மேல் துணிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசுகள் வழங்கப்படுகின்றன.
