/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டப்பணிகள் ஆணைய செயலர் அலுவலகம் ஐகோர்ட் நீதிபதிகள் திறந்து வைப்பு
/
சட்டப்பணிகள் ஆணைய செயலர் அலுவலகம் ஐகோர்ட் நீதிபதிகள் திறந்து வைப்பு
சட்டப்பணிகள் ஆணைய செயலர் அலுவலகம் ஐகோர்ட் நீதிபதிகள் திறந்து வைப்பு
சட்டப்பணிகள் ஆணைய செயலர் அலுவலகம் ஐகோர்ட் நீதிபதிகள் திறந்து வைப்பு
ADDED : நவ 17, 2024 02:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலர் அலுவலகத்தை, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் திறந்து வைத்தனர்.
புதுச்சேரியில் மாநில சட்டப்பணிகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்குபிராந்திய வழக்குகளுக்கும், சுமூகமுறையில் தீர்வு கண்டு வருகிறது.இதன் உறுப்பினர் செயலராக நீதிபதி அம்பிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண, தற்போதுபுதுச்சேரி மற்றும் காரைக்கால்மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்திற்கு தனித்தனியே உறுப்பினர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலராக கிறிஸ்டியன், காரைக்கால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலர்சந்திரசேகர் சமீபத்தில்நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில்புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலர் அலுவகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா வரவேற்றார். அலுவலகத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர், ஆஷா, சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். புதுச்சேரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையர் செயலர் கிறிஸ்டியனை, அலுவலக இருக்கையில் அமர வைத்தனர்.
விழாவில் சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், காரைக்கால் மாவட்ட நீதிபதி முருகானந்தம், வக்கீல்கள் சங்க தலைவர் ரமேஷ், காரைக்கால் வக்கீல்கள் சங்க தலைவர் பாஸ்கரன், வக்கீல்கள், நீதித்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.