/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
/
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : ஜூன் 06, 2025 06:48 AM

புதுச்சேரி; உருளையன்பேட்டை தொகுதியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகையை தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினரும், தொகுதி பொறுப்பாளருமான கோபால், உருளையன்பேட்டை தொகுதியில் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி அலுவலகத்தில் நடந்தது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
தொகுதி செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் குரு, ஐசக், சேட்டு, ஸ்டீபன் ராஜ், முத்து, கருணாகரன், அகிலன், பிரகாஷ், முருகன், அந்தோணி, ரவி, விமல், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.