/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருமான வரித்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வருமான வரித்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 19, 2025 04:56 AM

புதுச்சேரி : புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஜிப்மர் அப்துல் கலாம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.
கடலுார் வருமான வரி துணை ஆணையர் அன்பழகன் வரவேற்றார். புதுச்சேரி வருவாய்த்துறை இணை ஆணையர் செல்வி ஆறுமுகம், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் குஷால் ராஜ் கருத்துரை வழங்கினர். வருமான வரி அதிகாரி செங்குட்டுவன், டி.டி.எஸ்., விதிகள் குறித்து பேசினார்.
பட்டயக் கணக்காளர் மீனாட்சி சுந்தர், சம்பளம் பெறும் ஊழியர்கள் தொடர்பான வருமான வரி விதிப்பு, விலக்குகள் மற்றும் சேமிப்பு, பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளின் ஒப்பீட்டு பகுப்பாய்வு, வருமான வரி விகிதங்கள், அபராதம் மற்றும் வழக்குகள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஜிப்மர் துணை இயக்குநர், அதிகாரிகள், புதுச்சேரி அரசின் டி.டி.ஓ.,க்கள், அரசின் வருமான வரியை கையாளும் அதிகாரிகள், பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் அலுவலக பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருமான வரி உதவி ஆணையர் சுரேஷ் பாபு கோண்டரு நன்றி கூறினார்.