தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விடுதலை நாள் விழா அதிகாரிகளுக்கு கண்டனம்

விடுதலை நாள் விழா அதிகாரிகளுக்கு கண்டனம்

விடுதலை நாள் விழா அதிகாரிகளுக்கு கண்டனம்


UPDATED : நவ 02, 2026 05:47 PM

ADDED : நவ 02, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 05:47 PM ADDED : நவ 02, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விடுதலை நாள் விழாவில் பங்கேற்காத உயர் அதிகாரிகளுக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்க தலைவர் பாலா அறிக்கை;

புதுச்சேரி விடுதலை நாளான நவம்பர் 1ம் தேதி, மக்களுக்கு சிறப்புமிக்க நாளாகும். 1954ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகள் இந்திய யூனியனுடன் இணைந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

இத்தகைய முக்கியத்தும் வாய்ந்த விழாவில், அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்ளாமல், புறக்கணித்து இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இது புதுச்சேரி மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதால், வன்மையாக கண்டிக்கிறோம்.

உயரதிகாரிகள் திட்டமிட்டு பங்கேற்கததால், இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டியாக அமையும். எனவே உயரதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us