/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ஒலிம்பியன் தேக்வாண்டோ சங்கத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம்

ADDED : மே 23, 2025 06:56 AM

புதுச்சேரி : இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், புதுச் சேரி ஒலிம்பியன் தேக்வாண்டோ சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
புதுச்சேரியில் தேக்வாண்டோ விளையாட்டை வளர்க்கும் வகை யில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், புதுச்சேரி ஒலிம்பியன் தேக்வாண்டோ சங்கத்தினை அங்கீகரித்து கடிதம் அளித்துள்ளது.
அக்கடிதத்தை சங்கத்தின் தலைவரும், அரசு கொறடா வுமான ஆறுமுகம், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்து, தேக்வாண்டோ விளையாட்டை புதுச்சேரி யில் ஊக்குவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதில், சங்கத்தின் செயலர் தினேஷ் குமார், துணை செயலாளர் ஜெனோ பெர்னாட், நிர்வாகிகள் தமிழரசன், ஹேமசங்கர், பயிற்சியாளர் ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையே நடந்த தேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரதிக்ஷா, பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்வரிடம் காண்பித்த வாழ்த்து பெற்றார்.