/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய மருத்துவ சங்கம் கிளை நிர்வாகிகள் தேர்வு
/
இந்திய மருத்துவ சங்கம் கிளை நிர்வாகிகள் தேர்வு
ADDED : டிச 24, 2025 05:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி இந்திய மருத்துவ சங்க மாநில கிளை நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி இந்திய மருத்துவ சங்க மாநிலக் கிளை, 2026-- 27ம் ஆண்டுக்கான, தேர்தலை நடத்துவதற்கான தலைமைத் தேர்தல் அதிகாரியாக மூத்த உறுப்பினர் துரைசாமியை அறிவித்தது.இந்நிலையில், வேட்புமனுக்கள் கடந்த 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை பெறப்பட்டன.
இதனையடுத்து வேட்புமனுக்களை பரிசீலித்த பிறகு, பின்வரும் மருத்துவர்கள் 2026--27ம் ஆண்டுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி தலைவர் சுதாகர், கவுரவ பொதுச்செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் மேனகா, பொருளாளர் சிவராமகிருஷ்ணன், இணைச் செயலாளர்கள் சுனில் ஜாதவ், பிரதீபா ஆகியோ ர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

