/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 'ஸோகோ' பயிற்சி மையம் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தகவல்
/
புதுச்சேரியில் 'ஸோகோ' பயிற்சி மையம் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தகவல்
புதுச்சேரியில் 'ஸோகோ' பயிற்சி மையம் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தகவல்
புதுச்சேரியில் 'ஸோகோ' பயிற்சி மையம் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தகவல்
ADDED : டிச 21, 2025 03:47 AM
புதுச்சேரி: ஏ.ஐ., தொழில் நுட்பத்தை கற்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளதாக 'ஸோகோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
புதுச்சேரி பழைய துறைமுகத்தில், 'நம்ம புதுச்சேரி' அமைப்பு சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற 'ஸோகோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது;
இன்று நம்ம புதுச்சேரி என்ற அமைப்பின் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். புதுச்சேரியை எப்படி வளர்ப்பது என்பதே இதன் நோக்கம். ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சி பெற வேண்டும் என, நான் அடிக்கடி கூறுவேன். நாட்டில் உள்ள 830 மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும். அதில் புதுச்சேரி ஒரு உதாரணமாக திகழ வேண்டும். காரணம், இது ஒரு யூனியன் பிரதேசம். இங்கு ஒரு அரசு உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர்.
புதுச்சேரி வளர்ச்சிக்கு ஜோகோ என்ன பங்களிக்க முடியும். எப்படி வேலை வாய்ப்பு அளிக்க முடியும். சென்னை மற்றும் மதுரைக்கும் புதுச்சேரியில் இருந்து நிறைய மாணவர்கள் நமக்கு வருகின்றனர். அதனால், புதுச்சேரியிலேயே செய்யலாமா என, பார்க்க வந்தோம். இங்குள்ள வரவேற்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால், புதுச்சேரியில் 'ஸோகோ' நிறுவனத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
புதுச்சேரியில், ஆண்டிற்கு 4,500 பட்டதாரிகள் உருவாகின்றனர். அவர்களில், எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் என, பார்க்கிறேன். முதலில் ட்ரெய்னிங் சென்டர் துவங்குவோம். முதலில் திறமை உள்ளதா என்பதை பார்ப்பதைவிட, திறமையை உருவாக்க முடியுமா என்பதையே பார்ப்போம். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, படிப்படியாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
இதற்கு, முதலில் 200 பேர் பயிற்சி பெறுவதற்கு ஒரு இடம் வேண்டும். அரசிடம் வேறு சலுகைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசும் இடம் தருவதாக கூறியுள்ளனர். அதனால், இன்னும் 2 மாதங்களில், புதுச்சேரியில் 'ஸோகோ'வின் பயிற்சி நிறுவனம் துவங்கப்படும்.
ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் நல்ல வாய்ப்புகளும் உள்ளது. சவால்களும் உள்ளது. ஏ.ஐ., தொழில் நுட்பம் தற்போது, சாப்ட்வேர் உருவாக்கும் நிலைக்கு சென்று கொண்டுள்ளது. புரோகிராமர் தேவையில்லை. அதனை ஒயிட் கோடிங் என்போம். 10 பேர் செய்யும் வேலையை ஒரு ஏ.ஐ.,யால் செய்ய முடியும். இது வேலை வாய்ப்பை பாதிக்குமா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுவரை அந்த தாக்கம் இல்லை.
ஆனால், அதே நேரத்தில் சாப்ட்வேர் தொழில் நுட்பத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. இருப்பினும் ஏ.ஐ., தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக ஜோகோ நிறுவனத்தில் நிறைய செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

