/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.எஸ்.பி., தலைமையில் விசாரணைக்குழு; அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
/
எஸ்.எஸ்.பி., தலைமையில் விசாரணைக்குழு; அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
எஸ்.எஸ்.பி., தலைமையில் விசாரணைக்குழு; அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
எஸ்.எஸ்.பி., தலைமையில் விசாரணைக்குழு; அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ADDED : மார் 07, 2024 04:20 AM

புதுச்சேரி : சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மாலை டி.ஜி.பி., சீனிவாஸ் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: சிறுமி கொலை வழக்கு விவகாரத்தில், இருவரை தவிர வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ்.எஸ்.பி., கலைவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கவும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிறுமி கொலை வழக்கில் சி.சி.டி.வி., பதிவு ஆதாரங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், போலீசார் மெத்தனமாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள், பந்த், போராட்டங்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம். இதில் நீதி கிடைக்க, எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் சேர்ந்து பாடுபட வேண்டும். கஞ்சா விற்பனை குறித்து, போலீசில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

