/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாரிசுதாரர் பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்
/
வாரிசுதாரர் பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்
ADDED : பிப் 21, 2025 04:37 AM
புதுச்சேரி: சுகாதரத்துறை வாரிசு தாரர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி சுகாதாரத் துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த 10ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறையில் வாரிசுதாரர் பணிக்கு விண்ணப்பித்து 130 பேருக்கு மேல் காத்திருக்கின்றனர்.
கடந்தாண்டு சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் அனைத்து துறைகளிலும் வாரிசுதாரர் பணிக்கு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்கப்படும் என, கூறினார்.
கொரோனா காலத்தில் இறந்த 13 சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கு கூட பணி நியமனம் வழங்கப்படவில்லை. சுகாதாரத் துறையில் ஒரு முறை தளர்வு அளித்து வாரிசுதாரர் பணி நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.