/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய தொழிலாளர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
/
விவசாய தொழிலாளர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : செப் 17, 2025 11:05 PM
புதுச்சேரி: விவசாய தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் மழைக்கால நிவாரணம் பெற வேளாண் தொழிலாளர் நல சங்க உறுப்பினர்களாக பதிவு செய்யவும், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாய தொழிலாளர்களுக்கு, வேளாண் தொழிலாளர் நல சங்கம் மூலம் மழைக் கால நிவாரணமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
மேலும் வேளாண் அமைச்சர் சட்டசபையில் அறிவித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் விவசாய பணிகளை எளிதாக செய்திட கடப்பாரை, மண்வெட்டி, அன்னக்கூடை மற்றும் அரிவாள் உள்ளிட்ட உபகரணங்கள் விலையில்லா பொருட்களாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நலத்திட்டங்களை பெறுவதற்கு புதுச்சேரி வேளாண் நல சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்க வேண்டும். எனவே, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.