/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வூதியர்கள் வாழ்வுறுதி சான்றிதழ் வழங்க அறிவுறுத்தல்
/
ஓய்வூதியர்கள் வாழ்வுறுதி சான்றிதழ் வழங்க அறிவுறுத்தல்
ஓய்வூதியர்கள் வாழ்வுறுதி சான்றிதழ் வழங்க அறிவுறுத்தல்
ஓய்வூதியர்கள் வாழ்வுறுதி சான்றிதழ் வழங்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 04:21 AM
புதுச்சேரி : புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூலக இயக்ககம் இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு கருவூலக அலுவலகங்களின் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் 2025ம் ஆண்டிற்கான வாழ்வுறுதி சான்றிதழ் வரும் மே மாதம் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இச்சான்றிதழை கருவூலகத்திற்கு நேரில் வந்தோ, முறைப்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அளித்த சான்றிதழின் மூலமாகவோ, இந்திய அரசின் ஜீவன் பிரமான் www.jeevanpramaan.gov.in என்ற வலைதளத்தின் மூலமாகவோ, தபால் அலுவலகத்தின் வாசற்படி சேவையை பயன்படுத்துவதன் மூலமாகவோ பதிவு செய்யலாம்.
எனவே, ஓய்வூதியதாரர் தங்களின் வசதிக்கு ஏற்ப வரும் மே 2ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2025ம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழ் மே 30ம் தேதிக்குள் சமர்பிக்க தவறினால், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என்றும் தெரியபடுத்தப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு கணக்கு மற்றும் கருவூலக இயக்ககத்தின் dat.py.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

