/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்டெக்ராவின் 30 ஆண்டு வளர்ச்சி
/
இன்டெக்ராவின் 30 ஆண்டு வளர்ச்சி
ADDED : அக் 04, 2024 03:32 AM

புதுச்சேரி: இன்டெக்ரா, கன்டென்ட் சர்வீசஸ், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ட்ரான்ஸ்பார்மேஷன் உலகில் முன்னணியில் உள்ள நிறுவனம். இவ்வாண்டு தனது 30ம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
சுறுசுறுப்பான செயல்பாடுகள், ஊழியர்கள் பாராட்டுகள் மற்றும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தை பற்றிய சிந்தனைகள் நிறைந்த, இந்த ஆண்டு முழுக்க நடைபெற்ற கொண்டாட்டங்கள், செப்டம்பர் 29 அன்று 'கனெக் ஷன்ஸ் ௨௦௨௪' என்ற நிகழ்ச்சி மூலம் நிறைவுற்றது.
1994ம் ஆண்டில் நிறுவப்பட்ட இன்டெக்ரா, புதுச்சேரியில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் சேவையாளர் என்ற ஆரம்ப நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று, உலகம் முழுவதும் உள்ள பதிப்பாளர்களுக்கு கன்டென்ட் சர்வீசஸ், தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் முன்நோக்கிய புதிய கண்டுபிடிப்புகளை வழங்கும் 2,300க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு உலகளாவிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
இன்டெக்ராவின் 'கனெக் ஷன்ஸ் ௨௦௨௪' நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கெவின் கேர் பி.லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான சி.கே. ரங்கநாதன் கலந்து கொண்டார்.
அவர், தனது உரையில், இன்டெக்ராவின் கவனிக்கத்தக்க 30 ஆண்டு பயணத்தை பாராட்டி, நிறுவனத்தின் திறமை, பல்துறை பங்களிப்பு, ஊழியர் நலனுக்கான நடவடிக்கைகள் மற்றும் சமுதாயத்தில் நேர்மறை தாக்கத்தை உருவாக்கிவரும் இன்டெக்ராவின் வலிமையை முன்வைத்தார்.
நிறுவனத்தின் பயிற்சிகளில் முதலீடு செய்வதுடன், ஒவ்வொரு ஊழியரும் அவரவர் மீது முதலீடு செய்து, தினமும் ஒரு மணி நேரத்தை சிந்தனை, உறுதிமொழிகள், காட்சி வடிவாக்கம் போன்றவற்றிற்கு ஒதுக்கி, அவர்களது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என்றார்.
இன்டெக்ராவின் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநரான ஸ்ரீராம் சுப்ரமணியா மற்றும் இணை நிறுவனர் மற்றும் இணை மேலாண்மை இயக்குநரான அனு ஸ்ரீராம், இன்டெக்ராவின் மூன்று தசாப்த வளர்ச்சி மற்றும் புதுமைகளை பிரதிபலிக்கும் ஊக்கமூட்டும் உரைகளை நிகழ்த்தினர்.
ஸ்ரீராம் சுப்ரமணியா கூறியதாவது, “30 ஆண்டு மைல் கல்லை எட்டுவது, எங்கள் அணியின் அர்ப்பணிப்பு மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும். எங்கள் பயணம் தொடர்ச்சியான கற்றல், புதுமை மற்றும் வளர்ச்சியால் நிரம்பியதாக இருந்தது.
நாம் முன்னணி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உயர்ந்த சேவை வழங்குவதன் மூலம் எங்கள் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.”
அனு ஸ்ரீராம், இன்டெக்ராவின் பல்துறை, சமத்துவம் மற்றும் ஒருங்கிணைத்தல் குறித்த அர்ப்பணிப்பை சிறப்பித்தபோது, “2009ம் ஆண்டிலிருந்து, பெண்களின் சுதந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை போன்ற திட்டங்களால் 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளன. பெண்களுக்கு விரும்பத்தகுந்த நியமன நிறுவனமாக இருக்க எங்கள் முழுமையான அர்ப்பணிப்பு உள்ளது,” என்றார்.
இந்த கொண்டாட்டம், இன்டெக்ரா ஊழியர்களின் கோலாகலமான கலாசார நிகழ்ச்சிகள் மூலம் மேலும் சிறப்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை கவுரவிக்கும் லெஜண்ட் விருதுகள் வழங்கப்பட்டது, சிறப்பம்சம். திறமையும் அர்ப்பணிப்பும் உள்ள ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள இன்டெக்ரா எப்போதும் உறுதியாக இருப்பதை அங்கீகரிக்கும் தருணமாக இருந்தது.
கடந்த 2002ம் ஆண்டிலிருந்து புதிய பட்டதாரிகளை வேலை வாய்ப்பு பெறக்கூடியவர்களாக உருவாக்கி வரும் தனது 'இன்போடீச்' திட்டத்தின் மூலம், அடுத்த தலைமுறை தொழில்முறையினரை உருவாக்கி வருகிற சில நிறுவனங்களில் ஒன்றாக இன்டெக்ரா திகழ்கிறது.

