/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிட்ஜஸ் லேர்னிங் பள்ளியில் ஒருமைப்பாட்டு கருத்தரங்கம்
/
பிரிட்ஜஸ் லேர்னிங் பள்ளியில் ஒருமைப்பாட்டு கருத்தரங்கம்
பிரிட்ஜஸ் லேர்னிங் பள்ளியில் ஒருமைப்பாட்டு கருத்தரங்கம்
பிரிட்ஜஸ் லேர்னிங் பள்ளியில் ஒருமைப்பாட்டு கருத்தரங்கம்
ADDED : ஜன 11, 2026 05:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி, பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், ஒருமைப்பாட்டு பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
குழந்தைகளின் உள்வாங்கல் கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சியை மையமாக கொண்டு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் மனநல மருத்துவர் வேல்பிரசாந்த், சிறப்பு கல்வியாளர் புவனா சிறப்புரையாற்றினர்.
டாக்டர் சசிதர்ராவ், மறுவாழ்வு பயிற்சியாளர் குணசேகர், பேச்சாளர் முத்துகுமரன் ஆகியோர் குழந்தைகளின் திறன், உணர்ச்சி புரிதல், நடத்தை மேலாண்மை, எதிர்கால பாதை மற்றும் சமூக பாதை குறித்து விரிவாக பேசினர்.
சிறப்பு விருந்தினராக சமக்ரா சிக் ஷா திட்டத்தின் இயக்குனர் எழில் கல்பனா பங்கேற்றார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.