/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச ரோபோ சாம்பியன்ஷிப் போட்டி: புதுச்சேரிக்கு 3வது இடம்
/
சர்வதேச ரோபோ சாம்பியன்ஷிப் போட்டி: புதுச்சேரிக்கு 3வது இடம்
சர்வதேச ரோபோ சாம்பியன்ஷிப் போட்டி: புதுச்சேரிக்கு 3வது இடம்
சர்வதேச ரோபோ சாம்பியன்ஷிப் போட்டி: புதுச்சேரிக்கு 3வது இடம்
ADDED : டிச 23, 2025 04:38 AM

புதுச்சேரி: சர்வதேச ரோபோக்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி வீரர்கள், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 13ம் தேதி, சர்வதேச ரோபோ (பிட்வா ரோபோடோவ்) சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.அதில் பங்கேற்ற புதுச்சேரி சேர்ந்த சஞ்சீதன் தலைமையில் 6 பேர் கொண்ட டி.எஸ்., ரோபோட்டிக் என்ற இந்திய அணி 3ம் இடத்தை பிடித்தது.
தொடர்ந்து இந்த அணியினர் கடந்த18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அபுதாபியில் நடந்த எதிர்காலத்திற்கான விளையாட்டுகள் (கேம்ஸ் ஆப் பியூச்சர்) சர்வதேச போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற இக்குழவினர் நேற்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்துவாழ்த்து பெற்ற னர்.